சுயேட்சை MLA மீது IG-யிடம் NR காங்கிரஸ் MLA-க்கள் புகார் மனு
பு துச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை அவதூறாக பேசிய ஏனாம் சட்டமன்ற உறுப்பினர் கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் மீது நடவடிக்கை எடுக்க கோரி, என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஐ.ஜியிடம் புகார் மனு அளித்தனர். புதுச்சேரி பிராந்தியமான ஏனாமில் முதலமைச்சர் ரங்கசாமியை கண்டித்து தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் தலைமையில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஏனாமில் நடைபெற்று வரும் அரசு விழாவில் நிறைவு நாளன்று முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள முதலமைச்சர் ரங்கசாமி வருகை புரிந்தால் அவருக்கு தொகுதி மக்கள் அனைவரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து அவரை ஊருக்குள் நுழைய விடாமல் தடுப்போம் என்றும், பொதுமக்கள் செருப்பு தூக்கி வீசுவார்கள் என்று தெரிவித்து அசோக் எம்எல்ஏ தெரிவித்து இருந்தார். இதற்கு புதுச்சேரி மாநில என். ஆர். காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அரசு கொறடாவும் சட்டமன்ற உறுப்பினருமான ஆறுமுகம் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள...