Posts

Showing posts from October, 2023

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு - தமிழிசை கண்டனம்

Image
      தமிழ்நாடு ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது என துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.     புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,     தமிழ்நாடு ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், தமிழக ஆளுநருக்கு எதிராக வார்த்தை வன்முறைகளும், செயல் வன்முறைகளும் சமீப காலமாக அதிகமாக ஆளுங்கட்சி ஆதரவாளர்களால் ஊக்கப்படுத்துவது கவலை அளிக்கிறது இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இது ஜனநாயகத்திற்கு ஏற்புடையது அல்ல. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமே தவிர கலவரத்தால் அல்ல. இதை தமிழக அரசு உடனே கட்டுப்படுத்த வேண்டும். மேலும் ஆளுநரின் மாண்பும், ஆளுநர் மாளிகையின் மாண்பும் காக்கப்பட வேண்டுமே தவிர தாக்கப்படக்கூடாது என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.