கண்ணீர்விட்டு கதறி அழுத பக்தர்கள் - யானை லட்சுமிக்காக
பு துச்சேரியில் உயிரிழந்த அருள்மிகு மணக்குள விநாயகர் கோவில் யானைக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் சிந்தியபடி அஞ்சலி செலுத்தினர். எங்கள் குடும்பத்தில் ஒருத்தர் போல் இருந்த இந்த யானை லட்சுமி இறந்தது மீளா துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும், யானை இல்லாத இந்த கோவிலை நினைத்துகூட பார்க்கமுடியவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். 1995-ஆம் ஆண்டு ஐந்து வயதில் லட்சுமி என்ற யாணை புதுச்சேரியில் உள்ள பிரசித்திபெற்ற அருள்மிகு மணக்குள விநாயகர் கோவிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை விநாயகருக்கு சேவை செய்தும், பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் ஆசீர்வாதம் வழங்கி வந்தது. மேலும் புதுச்சேரி மக்களிடமும் பொதுமக்களிடமும் அன்பாக பழகக்கூடியது. பாசத்திற்குரிய பழகுவதற்கு இனிமையான நல் உள்ளம் கொண்ட யாணை லட்சுமி வழக்கம் போல் இன்று விடியற்காலை ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள தனது இருப்பிடத்திலிருந்து நடை பயிற்சிக்காக வெளியே சென்றது. கல்வே காலேஜ் அருகே நடந்து சென்ற போது திடீரென யானை லட்சுமி மயங்கி கீழே விழுந்தது. மருத்துவர்களும், யானை ...