மதுக்கடையை மூடக்கோரி உண்ணாவிரதம்
புதுச்சேரி உழவர்கரை பேருந்து நிறுத்தம் அருகில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான கடையை மூட கோரி 100-க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் மதுக்கடை அருகே அனைத்து கட்சியினருடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஆளும் அரசானது ஏராளமான மதுபானக்கடைகள் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் வசிக்கும் பல்வேறு பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இதே போல் புதுச்சேரி மாநிலம் உழவர்கரை பகுதியில் தேவாலயங்கள், கோவில்கள், பள்ளிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் மதுபான கடையை திறக்க அனுமதி கொடுத்து மதுபான கடையும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மதுபான கடையை உடனடியாக மூட வேண்டும் எனக் கோரி உழவர்கரை மதுபான கடை எதிர்ப்பு போராட்டம் குழு ஒன்றை உருவாக்கி மது கடை அருகே கண்டன ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு. வருகின்றனர். இதுவரை அரசு செவிசாய்க்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் மதுகடையை மூட கோரி மதுக்கடை அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் மதுக்கடை திறக்க எதிர்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் உழவர்கரை பகுதியில் ஆளும் கூட்டணி அரசின் பாஜக ஆதரவு சுயேட்சை எம.எல்.ஏ சிவசங்கரனும் ஆதரவு தெரிவித்து மதுக்கடையை மூட கோரி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments
Post a Comment