ஆளுநர்களை விமர்சிப்பவர்களுக்கு தமிழிசை எச்சரிக்கை

 ளுநர்களை பற்றி மோசமாக விமர்சிக்கும் விமர்சகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை எச்சரிக்கை விடுத்துள்ளார்.




புதுச்சேரியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திர்ராஜன், பிரதமர் மோடி ஒரு முடிவு எடுத்தால் அது மக்களுக்கான முடிவாகத்தான் இருக்கும் என்றும், அதுபோல் அவரிடம் பாடம் கற்றுக்கொண்ட நாங்களும் எடுக்கும் முடிவுகள் மக்களுக்கான முடிவுகளாகத்தான் இருக்கும் என்று கூறினார். இந்திய நாட்டை உலகத்தில் உள்ள நாடுகளுக்கு குருவாக மாற்ற முயற்சி செய்கிறார் அதற்க்கு உதாரணமாக தான் ஜி 20 மாநாடு என்றார். மேலும் பிரதமர் மோடி புத்தகத்திற்கு இளையராஜா முகவுரை எழுதியதற்கு பல விமர்சனங்கள் எழுந்துள்ளது. என்றும், புத்தகத்தை படிக்காமல் விமர்சிப்பது தவறு. முதலில் புத்தகத்தை படியுங்கள். இணைய விமர்சர்கள் விமர்சிக்கும் அளவிற்கு நாங்கள் முட்டாள்கள் அல்ல என்றும், நாகரீகமாக விமர்சிக்க வேண்டும். இணையதளங்களை திறந்தால் ஆளுநர்களை பற்றியும், என்னை பற்றி மோசமாகவும், மரியாதையின்றியும் விமர்சனம் செய்கின்றனர். படிப்பதற்கே கடினமாக உள்ளது. இணையதளத்தில் மோசமாக என்னை விமர்சனம் செய்தால். ஏன் இப்படி செய்தோம் என்பதை புரிந்துகொள்ளும் வகையில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

Comments