Posts

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு - தமிழிசை கண்டனம்

Image
      தமிழ்நாடு ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது என துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.     புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,     தமிழ்நாடு ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், தமிழக ஆளுநருக்கு எதிராக வார்த்தை வன்முறைகளும், செயல் வன்முறைகளும் சமீப காலமாக அதிகமாக ஆளுங்கட்சி ஆதரவாளர்களால் ஊக்கப்படுத்துவது கவலை அளிக்கிறது இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இது ஜனநாயகத்திற்கு ஏற்புடையது அல்ல. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமே தவிர கலவரத்தால் அல்ல. இதை தமிழக அரசு உடனே கட்டுப்படுத்த வேண்டும். மேலும் ஆளுநரின் மாண்பும், ஆளுநர் மாளிகையின் மாண்பும் காக்கப்பட வேண்டுமே தவிர தாக்கப்படக்கூடாது என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சுயேட்சை MLA மீது IG-யிடம் NR காங்கிரஸ் MLA-க்கள் புகார் மனு

Image
  பு துச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை அவதூறாக பேசிய ஏனாம் சட்டமன்ற உறுப்பினர் கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் மீது நடவடிக்கை எடுக்க கோரி, என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஐ.ஜியிடம் புகார் மனு அளித்தனர். புதுச்சேரி பிராந்தியமான ஏனாமில் முதலமைச்சர் ரங்கசாமியை கண்டித்து தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் தலைமையில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஏனாமில் நடைபெற்று வரும் அரசு விழாவில் நிறைவு நாளன்று முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள முதலமைச்சர் ரங்கசாமி வருகை புரிந்தால் அவருக்கு தொகுதி மக்கள் அனைவரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து அவரை ஊருக்குள் நுழைய விடாமல் தடுப்போம் என்றும், பொதுமக்கள் செருப்பு தூக்கி வீசுவார்கள் என்று தெரிவித்து அசோக் எம்எல்ஏ தெரிவித்து இருந்தார். இதற்கு புதுச்சேரி மாநில என். ஆர். காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அரசு கொறடாவும் சட்டமன்ற உறுப்பினருமான ஆறுமுகம் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள...

மதுக்கடையை மூடக்கோரி உண்ணாவிரதம்

Image
    பு துச்சேரி உழவர்கரை பேருந்து நிறுத்தம் அருகில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான கடையை மூட கோரி 100-க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் மதுக்கடை அருகே அனைத்து கட்சியினருடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஆளும் அரசானது ஏராளமான மதுபானக்கடைகள் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் வசிக்கும் பல்வேறு பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இதே போல் புதுச்சேரி மாநிலம் உழவர்கரை பகுதியில் தேவாலயங்கள், கோவில்கள், பள்ளிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் மதுபான கடையை திறக்க அனுமதி கொடுத்து மதுபான கடையும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மதுபான கடையை உடனடியாக மூட வேண்டும் எனக் கோரி உழவர்கரை மதுபான கடை எதிர்ப்பு போராட்டம் குழு ஒன்றை உருவாக்கி மது கடை அருகே கண்டன ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு. வருகின்றனர். இதுவரை அரசு செவிசாய்க்காததால் ஆத்த...

ஆளுநர்களை விமர்சிப்பவர்களுக்கு தமிழிசை எச்சரிக்கை

Image
  ஆ ளுநர்களை பற்றி மோசமாக விமர்சிக்கும் விமர்சகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திர்ராஜன், பிரதமர் மோடி ஒரு முடிவு எடுத்தால் அது மக்களுக்கான முடிவாகத்தான் இருக்கும் என்றும், அதுபோல் அவரிடம் பாடம் கற்றுக்கொண்ட நாங்களும் எடுக்கும் முடிவுகள் மக்களுக்கான முடிவுகளாகத்தான் இருக்கும் என்று கூறினார். இந்திய நாட்டை உலகத்தில் உள்ள நாடுகளுக்கு குருவாக மாற்ற முயற்சி செய்கிறார் அதற்க்கு உதாரணமாக தான் ஜி 20 மாநாடு என்றார். மேலும் பிரதமர் மோடி புத்தகத்திற்கு இளையராஜா முகவுரை எழுதியதற்கு பல விமர்சனங்கள் எழுந்துள்ளது. என்றும், புத்தகத்தை படிக்காமல் விமர்சிப்பது தவறு. முதலில் புத்தகத்தை படியுங்கள். இணைய விமர்சர்கள் விமர்சிக்கும் அளவிற்கு நாங்கள் முட்டாள்கள் அல்ல என்றும், நாகரீகமாக விமர்சிக்க வேண்டும். இணையதளங்களை திறந்தால் ஆளுநர்களை பற்றியும், என்னை பற்றி மோசமாகவும், மரியாதையின்றியும் விமர்சனம் செய்கின்றனர். படிப்பதற்கே கடினமாக உள்ளது. இணையதளத்தில் மோச...

பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளிய முதலமைச்சர் ரங்கசாமி

Image
         உ லகத்திற்கே வழிகாட்டியவர் பிரதமர் மோடி என முதலமைச்சர் ரங்கசாமி புகழாரம் சூட்டியுள்ளர். மோடியை எதிர்த்து குஜராத்தில் பிரச்சாரம் செய்த போது என் முதுகில் மோடி தட்டி உற்சாகபடுத்தினார் எனவும் ரங்கசாமி பெருமிதம். புதுச்சேரியில் மோடி @20 நனவாகும் கனவுகள் மற்றும்  அம்பேத்கர் &மோடி என்ற இரு நூல்கள் வெளியீட்டு விழா புதுச்சேரி காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சபாநாயகர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் மோடி @20 நனவாகும் கனவுகள் என்ற நூலினை ஆளுநர் தமிழிசை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வெளியிட முதலமைச்சர் ரங்கசாமி பெற்றுக்கொண்டார். தொடர்ந்து அம்பேத்கர் &மோடி என்ற புத்தகத்தை முதலமைச்சர் வெளியிட ஆளுநர் தமிழிசை பெற்றுக்கொண்டார். பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, மோடி @20 நனவாகும் கனவுகள், அம்பேத்கர் &மோடி ஆகிய இரண்டும் முக்கியமான நூல் என்றும், தமிழில் மொழியாக்கம் செய்து இங்கு வெளியிட்டுள்ளனர்.மோடி @2...

டெங்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கிய திமுக

Image
 பு துச்சேரியில் டெங்கு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கும் நிகழ்ச்சியை எதிர்க்கட்சி தலைவர் சிவா தொடங்கி வைத்தார். புதுச்சேரியில் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.  வில்லியனூர் சட்டமன்ற தொகுதியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா  பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். அந்தவகையில் புதுச்சேரி நலப்பணிச்சங்கம் சார்பில் வில்லியனூர் சிவன் கோயில் அருகில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிவா பங்கேற்று மக்களிடம் டெங்கு விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், டெங்கு காய்ச்சல் கொசுவால் ஏற்படுகிறது. நீர் தேங்கி நிற்கும் பகுதிகள் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளன. எனவே பொதுமக்கள் நம் வீட்டைச் சுற்றியும், தெருக்களிலும் மழைநீர் தேங்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சல் வராமல் முன்னெச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி நலப்பணிச்சங்கம் தலைவர் வெற்றிவேல், ஆலோசகர் அய்யனார் மற்றும் த...

யானை லஷ்மிக்கு 1200 கிலோவில் சிலை வைத்து வழிபாடு

Image
  பு துச்சேரியில் உயிரிழந்த மணக்குள விநாயகர் கோவில் யானை லக்ஷ்மிக்கு உயிரிழந்த இடத்தில் 1200 கிலோ கொண்ட நினைவு சிலை வைக்கப்பட்டது. சிலையில் மேல் புதுச்சேரியின் செல்ல மகள் என்ற எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலின் யானை லக்ஷ்மி இரண்டு தினங்களுக்கு முன்பு உயிரிழந்தது. இதனை அடுத்து மணக்குள விநாயகர் கோவிலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து ஊர்வலமாக கொண்டு சென்று அன்று மாலையில் கடலூர் சாலையில் உள்ள வனத்துறைக்கு அருகாமையில் ஸ்ரீ காளத்தீசுவரர் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஜே.வி.எஸ் நகரில் அடக்கம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களாக மக்கள் சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல் காமாட்சியம்மன் கோவில் வீதியில் லட்சுமி யானை உயிரிழந்த இடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது யானை லஷ்மி உயிரிழந்த இந்த இடத்தில் நான்கு அடி பீடமும் இரண்டு அடி சாய்ந்த நிலையில் 1200 கிலோ கொண்ட யானை உருவம் கற்சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை பிரதிஷ்டை செ...